Ads Header

Pages


25 March 2012

கறி வடை-- மிளகு கறி சமையல் குறிப்புகள்!

கறி வடை

தேவையான பொருட்கள்
கீமா(கொத்திய கறி ) - நூரு கிராம்
பூண்டு - நான்கு பல்லு
காஞ்சமிளகாய் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி (பட்டைம்கிராம்பு,ஏலம்)
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - ஒன்று
கொத்து மல்லி கீரை - கால் கட்டு
கடலை பருப்பு - கால் கப்
மைதா,கார்ன்பிளர் பவுடர் - தலா ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவயான அளவு

செய்முறை
கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைகவும்.
அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதைல் காஞ்சமிளகய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு சுர்ட்டி வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும்.
வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆறவக்கவும்.
ஆறியது மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நல்ல அரைத்து ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரிதெடுக்கவும்.
உதிர்ந்து போனால் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறிக்கொள்ளவும் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிகொள்ளவும்.
வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்..


குறிப்பு:
இதை சீக்கன் மீனுலும் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------
கறி வடை -2
இது சாதத்துடன் சாப்பிடும் கறி வகை. தனியாக மாலை நேர சிற்றுண்டியாக, லெமன் சாறு கலந்த வெங்காயத்தோடு சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்!

தேவையான பொருட்கள்
மட்டன் அல்லது பீஃப்(எலும்பு நீக்கியது) - 1/4 கிலோ
தேங்காய் (அரைத்தது) - 2 ஸ்பூன்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 3
மல்லி கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவைக்கு

செய்முறை
முதலில் எலும்பு நீக்கிய கறியை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,அரைத்த தேங்காய், உப்பு, மசாலாத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,நைஸாக அரிந்த மல்லி கீரை, கலக்கிய முட்டை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து, வடை போன்று தட்டிகொள்ளவும்.
வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தட்டிய வடைகளைப் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
----------------------------------------------------------------------
இறைச்சிவடை -3

தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி(அ)மாட்டு இறைச்சி அரைத்தது- 400 கிராம்
இஞ்சி,பூண்டுவிழுது- 1தேக்கரண்டி
முட்டை - 1
நாட்டு வெங்காயம்- 50 கிராம்
அரைத்த தேங்காய் விழுது- 1மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை அரிந்தது- 1 மேஜைக்கரன்டி
கரம் மசாலாப்பொடி- 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
இனிப்பில்லாத ப்ரட் துண்டு - 1
சோள மாவு - 1 மேஜைக்கரண்டி
சமையல் எண்ணை- 2 மேஜைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை
முதலில் அரைத்த இறைச்சியுடன் ப்ரட் துண்டைப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்,மேலும் அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுது மசாலா பவுடர்,அரிந்த வெங்காயம்,பொடிதாக நருக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி உப்பு அணைத்தயும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்,மேலும் அதில் அரைத்த தேங்காய் விழுது,சோள மாவு முட்டை ஆகிய பொருட்க்களை சேர்த்து நன்ங்கு பிசந்து வைக்கவும்
பிறகு ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் இறைச்சிக்கலவையை பருப்பு வடைப்போல் தட்டி போடவும்,இனி மிதமான தீயில் வெந்ததும் திருப்பி போட்டு சிவந்த பின்பு எடுத்து சூடாக பறிமாறவும்

குறிப்பு:
காரம் அவரவர்களுக்கு ஏற்றார்ப்போல் கூட்டவோ குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்

------------------------------------------------------------------------------------------------
மிளகு கறி

குளிர் காலங்களில் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்

தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - ஒரு முழு பூண்டு
மிளகு தூள் - ஒரு மேசை கரண்டி
சீரகதூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை - ஐந்து தேக்கரண்டி
வெங்காயம் - நான்கு
கருவேப்பிலை - ஐந்து ஆர்க்

செய்முறை
எண்ணையை காய வைத்து அதில் காஞ்ச மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பிறகு வூண்டை பொடியாகா அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.
கடைசியில் மிளகு சீரக தூள் தூவி மீண்டும் கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner