Ads Header

Pages


14 March 2012

தேங்காய்ப் பால் வெஜ் சூப் சமையல் குறிப்புகள் !

தேங்காய்ப் பால் வெஜ் சூப்
தேவையானவை: அரை மூடி தேங்காயில் எடுக்கப்பட்ட தேங்காய்ப் பால், பாதாம் பருப்புத் தூள், கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், கடுகு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய கேரட், கோஸ், பீட்ரூட் கலவை - ஒருகப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். பாதாம்பருப்புத் தூளுடன் சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் வெந்த காய்கறிகள், வேக வைத்து வடிகட்டிய தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி தேங்காய்ப் பாலை ஊற்றவும். கடாயில் நெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, சூப்பில் கொட்டவும்
-------------------------------------------------------------------------------------------------
கொத்தமல்லி சூப்

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
பூண்டு - அரை கப்
மிளகு 1 1/2 ஸ்பூண்
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - 1/2 ஸ்பூண்

செய்முறை:

கொத்தமல்லி, பூண்டு, மிளகு எல்லாவற்றையும் மைய அரைக்கவும். எண்ணெய் காய வைத்து பூண்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner