Ads Header

Pages


24 March 2012

சமையல் .டிப்ஸ் .டிப்ஸ்

சப்பாத்தி, பூரி ஒண்ணா!
பலரும் சப்பாத்திக்கும், பூரிக்கும் ஒரே மாதிரிதான் மாவு தயார் செய்கின்றனர்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அது அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் பிடிக்குமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக அடித்து பிசைய வேண்டும். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இப்படி தயார் செய்த மாவில் செய்யும் சப்பாத்தி, எண்ணெய், நெய் சேர்த்துச் செய்தாலும், சுக்கா ரொட்டியாக செய்தாலும், மிகவும் மிருதுவாக இருக்கும்.

பூரிக்குக் குறைந்தபட்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும். மாவில் எண்ணெய் சேர்க்க வேண்டாம். சிறிது ஓமம் சேர்த்துப் பிசைந்தால் வாசனையாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் நல்லது.
எண்ணெயை அடுப்பில் வைத்த பிறகு மாவைப் பிசைந்தால் போதும்.

இப்படிச் செய்தால் பூரி சிறிது கூட எண்ணெய் குடிக்காது. பூரி இடும் போது மாவை தொட்டுக் கொள்ளாமல் சிறிது எண்ணெயைத் தொட்டுக் கொண்டு செய்தால், பூரி பொரித்த பிறகு எண்ணெய் சுத்தமாக இருக்கும். அடியில் வண்டல் தங்காது. மறுபடியும் புது எண்ணையாக பயன்படுத்தலாம்.


தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.

* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.

* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.

* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner