Ads Header

Pages


08 March 2012

தால் கோஃப்தா... சப்பாத்தி-பூரியுடன் சபாஹ் கூட்டணி! - சமையல் குறிப்புகள் !

ஃபாஸ்ட் ஃபுட் மேளா!
தால் கோஃப்தா... சப்பாத்தி-பூரியுடன் சபாஹ் கூட்டணி!


தேவையானவை: கோப்தா செய்ய; கடலைப்பருப்பு - அரை கப், துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கிரேவிக்கு: துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோஃப்தாவுக்கு கொடுத்துள்ளவற்றில் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கிரேவி: துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். எண்ணெய், நெய்யை சேர்த்து காய வைத்து அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி, மிளகாய்த்தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பருப்பை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கியதும், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து சூடாகப் பரிமாறவும்.

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக் கொள்ளவும், பாசுமதி சாதத்தில் கலந்து சாப்பிடவும் நன்றாக
---------------------------------------------------------------------------
சப்பாத்தி தால்

தேவையான பொருட்கள்
1. சிறுபருப்பு - 1 கப்
2. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தாளிக்க
3. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
4. தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
5. மிளகாய் வற்றல் - 2
6. கருவேப்பிலை, கொத்தமல்லி
7. உப்பு
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு சிறுபருப்பில் சேர்க்கவும்.
இதை குக்கரில் 2 விஸில் வைத்து எடுக்கவும்.
பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:
தண்ணீர் அதிகம் கூடாது, சற்று கெட்டியாக இருக்க வேண்டும். சப்பாத்தி'க்கு எளிதில் செய்ய கூடிய பக்க உணவு இது. சுவையாக இருக்கும். காரம் வேண்டுமானால் மிளகாயை கரண்டியால் நசுக்கி விட்டு கொதிக்க வைக்கவும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner