Ads Header

Pages


08 March 2012

பல வகை சட்னிகள்! துவையல்கள்!!! - சமையல் குறிப்புகள் !

வெங்காய கொஸ்த்து

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 3
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 6 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலையை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை அதனுடன் வதக்கவும்.
லேசாக வதங்கியவுடன் புளி கரைசலை ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிஷம் கழித்து இறக்கிவிடவும்.
இது தோசை,ஆப்பம், சப்பாத்திக்கு ஒரு நல்ல சைட்- டிஷ்!


குறிப்பு:
புளி விரும்பாதவர்கள், பாதி எலுமிச்சை பழம் பிழிந்துக்கொள்ளலாம் அல்லது இன்னொரு தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------

பசலைக்கீரை சட்னி

தேவையானப்பொருட்கள்:

பசலைக்கீரை - 10 முதல் 15 இலைகள்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் பசலைக்கீரையைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி ஆறவிடவும். அத்துடன் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
=====================================================================

தக்காளி கொஸ்து


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4 (நன்றாகப் பழுத்தது)
கடலை மாவு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளியை அப்படியே முழுதாகப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பின்னர் தக்காளியை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்தெடுக்கவும். உரித்தத் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மசித்த விழுதை சூப் வடிகட்டி அல்லது சற்று பெரிய துளையுள்ள ஒரு வடிகட்டியில் போட்டு, இலேசாக தேய்த்தால், தக்காளி விதை நீங்கி, கெட்டியான தக்காளிச் சாறு கிடைக்கும்.

மசிப்பதற்கு பதில், உரித்த தக்காளியை மிக்ஸியில் போட்டு ஓரிரண்டு சுற்று சுற்றி, வடித்தெடுக்கலாம். மிக்ஸியில் அரைப்பதானால், தக்காளி நன்றாக ஆறியபின் போட்டு அரைக்கவும். இல்லையெனில் மூடி திறந்து, வெளியே சிதறி விடும். கவனம் தேவை.

தக்காளி சாற்றில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் தக்காளிச்சாற்றை ஊற்றிக் கலக்கி கொதிக்க விடவும். கொஸ்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கடலைமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்றாகக் கலக்கி விட்டு, மிதமான தீயில் வைத்து கொஸ்து சற்று கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து சிறிது கொத்துமல்லித் தழையைத் தூவி பரிமாறலாம்.

இட்லி / தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: கடைகளில் கிடைக்கும் தக்காளிச்சாற்றை (Tomato Puree)உபயோகித்தும் இதை செய்யலாம். தக்காளிச்சாற்றில் தேவையான தண்ணீரைச் சேர்த்து, மேற்கூறியபடி இந்த கொஸதை தயாரிக்கலாம். சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும்.
==================================================================

பருப்பு துவையல்



தேவையானப்பொருட்கள்;

துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் (எண்ணை போடாமல்) பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பருப்பு சற்று ஆறியதும், அத்துடன் மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீரையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: துவையல் அரைக்கும் பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்தால் சுவை மேலும் கூடும்.



கறிவேப்பிலைத் துவையல்
தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், பருப்புகள், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடைசியில், அடுப்பை தணித்துக் கொண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து வதக்கி, சற்று ஆறியவுடன் அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இதில் மேலும் சற்று நீரைச் சேர்த்து, தளர சட்னியாகவும் செய்யலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாற நன்றாயிருக்கும்.

கவனிக்க: தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். தேங்காயைத் தவிர்த்தும் இந்த துவையலைச் செய்யலாம். தேங்காய் உபயோகிக்காவிட்டால், பருப்பு வகைகளைச் சற்று கூடுதலாக போடவும்.

தேங்காய், பருப்பு எதுவுமில்லாமல், வெறும் உப்பு, புளி, மிளகாயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்தும் செய்யலாம். இந்த வகை சற்று கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது.
===================================================================

கடப்பா
தஞ்சை, மற்றும் கும்பகோணம் பகுதியில் பிரசித்தமான கடப்பா (பெயர் காரணம் தெரியவில்லை)அப்பகுதியிலுள்ள பெரும்பாலான ஓட்டல்களில் கிடைக்கும். திருமண விருந்துகளின் போதும் பரிமாறப்படும். இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை இலை - 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, பொட்டுகடலை, தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் ஏலக்காய், பட்டை இலையைப் போடவும். பட்டை இலை சற்று வறுபட்டதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அத்துடன் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, சற்று சேர்ந்தால் போல் வந்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:

பொட்டுக்கடலைக்குப்பதில், சிறிது கடலைமாவை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.

சிலர் இதில் வேகவைத்த பயத்தம் பருப்பையும் சேர்ப்பார்கள்.

===================================================================

வெங்காய சட்னி

தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் 5 அல்லது மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு:

நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெங்காயத்தை தோலுரித்து விட்டு, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். அதில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு: சாம்பார் வெங்காயம் இல்லையென்றால், பெரிய வெங்காயத்தை நறுக்கி உபயோகிக்கலாம்.

====================================================================

கேரட் தக்காளி சட்னி

தேவையானப்பொருட்கள்:

கேரட் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

கேரட்டை தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் நடுத்தர அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் மிளகாயைப் போட்டு சற்று வறுத்து அத்துடன் இஞ்சி, தக்காளித்துண்டுகள் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அத்துடன் கேரட் துண்டுகளையும் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி, கீழே இறக்கி வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

பின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

==================================================================

புதினா சட்னி
தேவையானப்பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணியளவு (கெட்டிப் பெருங்காயம் இல்லையென்றால் பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், பருப்பு ஆகியவற்றை போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயின் நிறம் சற்று மாறியவுடன், புதினாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வத்க்கவும். பின்னர் அதில் புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மீண்டும் ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.

சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

=====================================================================

பூண்டு சட்னி

தேவையானப்பொருட்கள்:

பூண்டுப்பற்கள் - 10 அல்லது 15
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிகஸியில் போட்டு , சிறிது தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். இதில் நல்லெண்ணையை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

வெந்தயத் தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையாயிருக்கும்.
பூண்டின் மருத்துவக் குணங்கள்
====================================================================

கறிவேப்பிலை பொட்டுக்கடலைச் சட்னி

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, மிளகாய், இஞ்சி, புளி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, எண்ணை சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுத்து, சட்னியின் மேல் கொட்டிக் கிளறவும்.

=====================================================================

தேங்காய் சிவப்பு சட்னி
தேவையானப் பொருட்கள்:

தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - கொட்டைப்பாக்களவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம்,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

=================================================================

கொத்துமல்லி பட்டாணி சட்னி
தேவையானப் பொருட்கள்:

பச்சைப்பட்டாணி (வேகவைத்தது) - 1/2 கப்
பச்சைக்கொத்துமல்லித்தழை (ஆய்ந்து, அலசி நறுக்கியது) - 1 கப்
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்)
புளி - கொட்டைப்பாக்களவு
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

தாளிக்கத் தேவையில்லை.

விருப்பமானால் 2 பல் பூண்டு சேர்த்து அரைக்கலாம்.

புளிக்குப்பதில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கலாம்.


குறிப்பு:

சப்பாத்தியுடன் குருமா போன்றவற்றைப் பரிமாறும் பொழுது, இந்தச் சட்னியையும் சேர்த்து பரிமாறலாம். ஜீரணத்திற்கு உதவும்.
==================================================================

கேரட் கடலை சட்னி


தேவையானப் பொருட்கள்:

கேரட் - 2
காய்ந்த மிளகாய் - 5
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்களவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடைசியில் கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியபின் உப்பு, வேர்க்கடலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்
------------------------------------------------------------------------------------------------
வெங்காய துவையல்

தேவையான பொருட்கள்
பெரிய வெங்கயம் - நான்கு
வெள்ளை எள் - ஒரு மேசை கரண்டி (வறுத்தது)
உளுந்து பருப்பு - முன்று மேசை கரண்டி (வறுத்தது)
காஞ்சமிளகாய் - நன்கு (தீயில் சுட்டது)
உப்பு
வெல்லம் - ஒரு பின்ச்
புளி -ஒரு சிறு கொட்டை பக்கு அளவு
எண்ணை - ஒருதேக்கரண்டி

செய்முறை
ஒரு வாயகன்ற வானலியில் அனைத்து பொருட்களையும் வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
இது டிபெரண்டான துவையல் எள்,உளுந்தின் மணம் அருமையாக இருக்கும்.
இட்லி, தோடை,அடை,மைதா தோசை,உப்புமா, கஞ்சி அனைத்திற்கும் பொருந்தும்
------------------------------------------------------------------------------------------------
முட்டைகோஸ் துவையல்

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ்-100கிராம்
பச்சைமிளகாய்-4(காரத்துக்கு ஏற்ப)
பூண்டு-2பல்
சீரகம்-1தேக்கரண்டி
கடலைபருப்பு-2மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1மேசைக்கரண்டி
புளி-நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி
உப்பு-தே.அளவு
எண்ணெய்-1மேசைக்கரண்டி
கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை
வானலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு,கடலை பருப்பை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
அதே எண்ணெயில் 1/2 தேக்கரண்டி சீரகம்,பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய கோஸ்,கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் இறக்கி ஆற விடவும்.
முட்டை கோஸ் கலவையுடன்,வறுத்த பருப்பு வகைகள்,உப்பு,புளி,மஞ்சள்தூள்,மீதமுள்ள சீரகம்,பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

குறிப்பு:
சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்
-----------------------------------------------------------------------------------------------
வெங்காய தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்
1. வெங்காயம் - 1 நறுக்கியது
2. தக்காளி - 1 நறுக்கியது
3. மிளகாய் வற்றல் - 3
4. உளுந்து - 2 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
6. எண்ணெய் - 2 தேக்கரண்டி
7. உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுந்து போட்டு சிவக்க வறுக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து லேசான பொன்னிரமாக வதக்கவும்.
இதில் தக்காளி'யும் சேர்த்து குழய வதக்கவும். பச்சை வாசம் போக வேண்டும்.
இந்த கலவையில் உப்பு சேர்த்து தேவைக்கு ஏர்ப்ப தண்ணீர் சேர்த்து சட்னி'யாக அரைக்கவும்.

குறிப்பு:
இது இட்லி, தோசை' க்கு ஏற்றது. தேவைப்பட்டால் வழக்கம் போல் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கருவேப்பிலை தாளித்து கலக்கலாம். மாறுதலுக்கு சிறிது தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம்
------------------------------------------------------------------------------------
வெங்காய தக்காளி கார சட்னி

தேவையான பொருட்கள்
1. வெங்காயம் - 3
2. தக்காளி - 2
3. பூண்டு - 4 பல்
4. மிளகாய் வற்றல் - 4
5. பெருங்காயம் - சிறிது
6. உப்பு
7. எண்ணெய்
8. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
9. கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும், கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து பிரட்டவும்.
இதை உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு:
இட்லி, தோசை'க்கு ஏற்றது.
---------------------------------------------------------------------------------------
வெங்காய தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்
1. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
2. தக்காளி - 2 (மிக்ஸியில் அடித்தது)
3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
4. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. உப்பு
தாளிக்க:
1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
2. கடுகு
3. சீரகம்
4. உளுந்து
5. கடலை பருப்பு
6. கருவேப்பிலை

செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்து, கருவேப்பிலை சேர்க்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போய் குழய ஆரம்பித்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

குறிப்பு:
சூடாக இருக்கும் போது 1 தேக்கரண்டி நெய் சேர்க்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.
-------------------------------------------------------------------------------------------------
வறுத்து அரைத்த துவையல்

எலுமிச்சை சாதம் புளிசாதம் சாம்பார் சாதம் போன்ற கலந்த சாத வகைகளுக்கு சூப்பர் காம்பினேஷன்

தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் -1/2கப்
மல்லிவிதை -2தேக்கரண்டி
மிளகாய் வற்றல் -5
கறிவேப்பிலை -1கொத்து
புளி -நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் -2 அல்லது 3
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-1தேக்கரண்டி

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி,மிளகாய் வற்றலை குறைந்த தீயில் கருகாமல் சிவக்க வறுக்கவும்
ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடிக்கவும்.
மீதமுள்ள பொருட்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியான துவையலாக அரைக்கவும்.

குறிப்பு:
எலுமிச்சை இலை அல்லது நார்த்தங்காய் இலை கிடைத்தால் 2இலை சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் கூடும் டூர் செல்லும் போது எடுத்து செல்வதானால் தேங்காயையும் லேசாக வறுத்து வெந்நீர் சேர்த்து அரைக்கவும்.கை படாமல் இருந்தால் 2நாட்கள் வரை கெடாமலிருக்கும்
---------------------------------------------------------------------------------
தக்காளி துவையல்

தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
காஞ்ச மிளகாய் - முன்று (தீயில் சுட்டது)
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - இரண்டு
உப்பு - தேவைக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பின்ச்

செய்முறை
எண்ணையை காய வைத்து அதில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் பொடியாக அரிந்து வத்க்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
இது இட்லி தோசைக்கு நல்ல இருக்கும்.
----------------------------------------------------------------
துவரம் பருப்பு துவையல்

ஜுரம் வந்தபோது வாய் கசப்பாக இருக்கும்,அப்போது வெள்ளைகஞ்சி உடன் இந்த துவையல் நல்ல இருக்கும்.

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - கொட்டைபாக்கள்வு
தேங்காய் - இரன்டு பத்தை
பூண்டு -ஒன்று
காஞ்ச மிளகாய் - இரண்டு
உப்பு - கொஞ்சம்

செய்முறை
மேலே குறிப்பிட்டு உள்ளா அனைத்து பொருட்களையும் அரை தேக்கரண்டி எண்ணையில் வருத்து ஆறியதும் மிக்சியில் அரைத்து சாப்பிடவும்.
--------------------------------------------------------------
புதினா தொக்கு

தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்டு
புளி - நெல்லிக்காய் அளவு
காரதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலைகள்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை
முதலில் புதினாவையும் புளியையும் ஒன்றாக போட்டு அரைக்கவும்.
பின் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை போடவும்.
கடைசியில் அரைத்த விழுது காரத்தூள், உப்பு போட்டு நன்றாக சுண்ட கிளற வேண்டும்.
இது ப்ரிட்ஜில் வைத்து இருந்தால் 3 வாரம் கெடாமல் இருக்கும். சாதத்துக்கும், இட்லிக்கும் நல்லது.

குறிப்பு:
நல்லெண்ய் விட்டால் மணமாக இருக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
---------------------------------------------------------------------
பொட்டுக்கடலை துவையல்

தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை-1/4கப்
தேங்காய் துருவல்-1/2கப்
மிளகாய் வற்றல்-2
பூண்டு-1பல்
உப்பு-தே.அளவு

செய்முறை
எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட துவையல் தயார்.
குறிப்பு:
பொட்டுக்கடலை மையாக அரைய வேண்டாம். சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்
-------------------------------------------------------
பூண்டு சட்னி

ஜீரணத்திர்க்கு நல்லது

தேவையான பொருட்கள்
1. பூண்டு - 5 பல்
2. உளுந்து - 3 மேஜைக்கரண்டி
3. உப்பு
4. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 2

செய்முறை
எண்ணெய் சேர்த்து உளுந்து மற்றும் மிளகாய் வற்றல்'யை வருக்கவும்.
இத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிரிது சிரிதாக தண்ணீர் சேர்த்து சட்னியாக அரைக்கவும்.

குறிப்பு:
இதில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து இட்லி, தோசை, சப்பாத்தி'க்கு தொட்டு சாப்பிடலாம்.
---------------------------------------------------------
பாசி பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு-1/4கப்
தேங்காய் துருவல்-1/2கப்
மிளகாய் வற்றல்-2
பூண்டு-1பல்
உப்பு-தே.அளவு

செய்முறை
பாசிபருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
வறுத்த பருப்புடன் மீதமுள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீரும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட துவையல் தயார்.

குறிப்பு:
பருப்பு மையாக அரைய வேண்டாம். சிறிது நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
------------------------------------------------------------------------------
பருப்புத் துவையல்


தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்: 1
தேங்காய்ப் பூ : 1/2 டேபிள் ஸ்பூன்.
உப்பு: சிறிது
பூண்டு : 1 சிறிய பல்

செய்முறை
துவரம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை, சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில், வறுத்த பருப்பு, தேங்காய்ப் பூ, சிவப்பு மிளகாய், உப்பு, பூண்டு பல், எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, துவையல் பதத்தில் அரைத்து
எடுக்கவும்.
-------------------------------------------------------------------
நிலக்கடலை சட்னி

தேவையான பொருட்கள்
நிலக்கடலை -- ஒரு கையளவு (வறுத்து தோல் நீக்கியது)
சிவப்பு மிளகாய் வத்தல் -- 5
புளி -- 1/2 கோலி அளவு
தேங்காய் துருவல் -- 5 டீஸ்பூன்
உப்பு -- 2 சிட்டிகை
தாளிக்க:
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- சிறிதளவு
சிறிய வெங்காயம் -- 1 கப் (பொடிதாக நறுக்கியது)

செய்முறை
வாணலியில் புளி,வத்தல்,தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் நிலக்கடலைபருப்பை சேர்த்து கலவையை அரைக்கவும்.
பின் வாணலியில் 4 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த கலவையை ஊற்றி உப்பு போடவும்.
நன்கு கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
ரெடி.
------------------------------------------------------------------------
மிளகு துவையல்

இது ஜுரம் வந்த சமயம், செய்து சாப்பிடுவது.வெள்ளை கஞ்சியுடன் சப்பிட்டால் வாய்க்கு ருசிபடும்.

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - அரை டம்ளர்
மிளகு - பத்து
உப்பு - இரண்டு சிட்டிக்கை அளவு
எண்ணை - ஒரு தேக்கரண்டி

செய்முறை
துவரம் பருப்பையும் மிளகையும் எண்ணையில் கருகாமல் வாசனை வரும் வரை வருத்து ஆறவையுங்கள்.
ஆறியதும் மிக்சியில் உப்பு சேர்த்து கொஞ்சமா தேவைக்கு தண்ணீர் தெளித்து சிறிது மையாக அரைத்து எடுக்கவும்.
சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி
குறிப்பு:
தேவைபட்டால் தேங்காய் துருவல் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து வருத்து கொள்ளுங்கள்.பெருங்காயப்பொடி கூட ஒரு சிட்டிக்கை சேர்த்து கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
மசாலா பப்பட்

தேவையான பொருட்கள்
லிஜ்ஜட் பப்பட் - 10
வெங்காயம் - 1
சிவப்புக் குடைமிளகாய் - 1
பச்சைக் குடைமிளகாய் - 1
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
காராபூந்தி அல்லது ஓமப்பொடி - 1/2கப்
உப்பு - சுவைக்கு
பிளேக் சால்ட் - 1டீஸ்பூன்
சாட் மசாலா - 1டீஸ்பூன்

செய்முறை
வெங்காயம்,வெள்ளரியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கேரட்டை துருவிக் கொள்ளவும்.குடை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
காய்களை கலக்காமல் தனிதனியாக உப்பு சேர்க்கவும்.
பப்படத்தை மைரோவேவ் அவனில் 30செகண்ட் வைத்தால் அழகாக பொரிந்து விடும்.
அவனில் சுட்ட பப்படத்தை சர்விங் பிளேட்டில் வைத்து முதலில் வெங்காயத்தை தூவவும்.குடை மிளகாய்,வெள்ளரி,கேரட் என ஒன்றன் பின் ஒன்றாக தூவவும்.
சாட் மசாலா.பிளேக் சால்ட் ஒரு பிஞ்ச் எடுத்து தெளிக்கவும்.
கடைசியாக ஓமப்பொடி அல்லது காராபூந்தி தூவி உடனே பறிமாறவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மசாலா பப்பட் சட்டென்று செய்யக்கூடியது.
குறிப்பு:
சிவப்புக் குடை மிளகாய் கிடைக்காவிட்டால் நன்கு பழுக்காத சிவப்பு நிற பெங்களூர் தக்காளியை சேர்க்கலாம்.லிஜ்ஜட் பப்பட்டில் மிளகு பிளேவர் வாங்கினால் காரமாக இருக்கும் .காரம் விரும்பாதவர்கள் பிடித்த பிளேவரில் பப்படம் வாங்கிக் கொள்ளவும்.
-------------------------------------------------------------------------------------
கொத்த மல்லி துவையல்

தேவையான பொருட்கள்
கொத்த மல்லி - ஒரு கட்டு
உளுந்த பருப்பு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 2 (காரத்திற்கு தகுந்தமாதிரி எண்ணிக்கை)
புளி - சிறிய நெல்லி அளவு
உப்பு சுவைக்கு,
எண்ணை - தேவைக்கு

செய்முறை
கொத்த மல்லியை அலசி சுத்தம் செய்துவிட்டு, இலைகளை மட்டும் தனியாக கிள்ளி வைக்கவும்.
பின் தண்டுகளை மிக சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன், வர மிளகாய், உலுந்து இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும்.
பின் எண்ணை விட்டு பொடியாக நறுக்கிய தண்டு, மற்றும் ஆய்ந்து வைத்துள்ள இலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக 2 நிமிடம் வதக்கி, தனித்தனியாக வைக்கவும்.
மிக்ஸியில் வரமிளகாய், உலுந்து இவைகளை முதலில் அரைத்துவிட்டு, பின் தண்டை சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். பின் இலைகளையும் புளியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
விருப்பப்பட்டால் கடுகு தாளித்து கொட்டவும்.
சுவையான துவையல் தயார்.

குறிப்பு:
சூடான சாதம் இட்லி மற்றும் தோசைக்கு நனறாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------------
இஞ்சிசட்னி

அஜீரணம்,வாய்வுத் தொல்லைகளால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு

தேவையான பொருட்கள்
இஞ்சி 1 நடுவிரல் அளவு
பெருங்காயம்-சிறிதளவு
கடலைப்பறுப்பு-ஒரு டேபிள்ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிள்காய்-மூன்று
கடுகு,கறிவேப்பிலை-தாளிப்பதற்கு

செய்முறை
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
இஞ்சி,கடுகு,கறிவேப்பிலை தவிர எல்லாவற்றையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்சியில் போட்டு மசியாக உப்பு சேர்த்துஅரைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு,கறிவேப்பிலை போட்டுத்தாளித்துக் கரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றவும். கொதி வந்தவுடன் இறக்கவும்.
இட்லி,தோசைக்கு மிகவும் ஏற்றது.
இட்லி மாவுப்பதத்தில் சட்னியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
புதினா சம்பால்

தேவையான பொருட்கள்
சிறிய தேங்காய் - பாதி
புதினா - 1 பிடியளவு
புளி - சிறிய எலுமிச்சையளவு
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
சிறிய வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு

செய்முறை
முதலில் காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுவைத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன் தேங்காய்,புதினா இலை,புளி,உப்பு அனைத்தையும் வைத்து அரைத்து, வழிக்கும் முன்பு வெங்காயத்தை சேர்த்து நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதினா சேர்ந்திருப்பதால், இது மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒரு துவையலாக இருக்கும்!
==================================================================
தக்காளி சட்னி-5

தேவையான பொருட்கள்
எண்ணெய்-2 தேக்கரண்டி
முழு உளுந்து-1 தேக்கரண்டி
கடலை பருப்பு-1தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்-2 or 3
சின்ன வெங்காயம்-10
தக்காளி -4
புளி-2(மிளகு அளவு)
தேங்காய் பூ-1/4கப்
உப்பு-தேவையான அளவு
தாளிக்க வேண்டியவை
-----------------------
எண்ணெய்-2 தேக்கரண்டி
கடுகு-1/4தேக்கரண்டி
முழு உளுந்து-1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1இனுக்கு
பெருங்காயம்-1 பின்ச்

செய்முறை
எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு,உளுந்து,1/4 தேக்கரண்டி சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்.
சிவப்பு மிளகாய் போட்டு வறுக்கவும்.
சின்ன வெங்காயம்(அரிந்தது) போட்டு வதக்கவும்
தக்காளி(பொடியாக அரிந்தது) போட்டு தண்ணீர் சுண்ட வதக்கவும்
தேங்காய் பூ frozen ஆக இருந்தால் தக்காளி உடன் சேர்த்து எண்ணெய் வாசனை போகும் வரை வதக்கவும் இல்லையெல் அப்படியே சேர்க்கவும்.
சீரகம் 3/4தேக்கரண்டி,உப்பு சேர்த்து ஆறியதும் Mixie-ல் அரைக்கவும்
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிக்க விடவும்,முழு உளுந்து சேர்த்து சிவக்க வறுக்கவும்
கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்க்கவும்.
தாளித்ததை Mixie-ல் அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
===================================================================

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner