Ads Header

Pages


29 March 2012

இஞ்சிக்கொத்து பனியம் --ஹஜ்ஜீர் பணியாரம் -- ரவை கலந்த குழிப்பணியாரம் சமையல் குறிப்புகள் !

இஞ்சிக்கொத்து பனியம்

தேவையான பொருட்கள்
மைதா - 1 கிலோ
தேங்காய் - 1
டால்டா - 200 கிராம்
முட்டை - 3
எண்ணெய் - அரை லிட்டர்
சீனி - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை
தேங்காயைத் துருவி நன்கு கெட்டியாக பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவை சலித்துப் போட்டு, தேங்காய் பாலினையும் ஊற்றி, முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
அதனுடன் சீனியையும், உப்பையும் சேர்த்து தேவையான அளவு நீரும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பதமாக பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு சப்பாத்தி கல்லில் சற்று கனமாக தேய்த்து, தேவையான வடிவங்களுக்கு நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் நறுக்கிய மாவுத் துண்டங்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
======================================================================
ஹஜ்ஜீர் பணியாரம்


தேவையான பொருட்கள்
அரிசிமாவு - ஒரு கிலோ
மைதா - கால் கிலோ
முட்டை - 4
சீனி - அரை கிலோ
நெய் - 150 கிராம்
கசகசா - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவினைப் போட்டு, அதில் மைதாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளவும். முட்டையையும் உடைத்து நன்கு அடித்து மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சீனி, கசகசா மற்றும் உப்பினையும் மாவுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை சப்பாத்தி கல்லில் சற்று கனமாக தேய்த்து அதனை தேவையான வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் நறுக்கிய துண்டங்களை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
======================================================================
ரவை கலந்த குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்
ரவை - 400 கிராம்
முட்டை - 4
சீனி - 200 கிராம்
சோடாஉப்பு - ஒரு சிட்டிகை
கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்
நெய் அல்லது டால்டா - தேவைக்கேற்ப

செய்முறை
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சீனி சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் ரவையைக் கலந்து தோசை மாவை விட சற்று கெட்டியான பக்குவத்தில் கரைத்து, அதில் தேங்காய்ப் பால், சோடா உப்பு போட்டுக் கலந்துக் கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து நெய் அல்லது டால்டா ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
===================================================================

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner