Ads Header

Pages


28 March 2012

பயனுள்ள பாதாம் பருப்பு!

  பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
 
நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை.
 
இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு. பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
 
பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர்.
 
இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner