Ads Header

Pages


09 March 2012

கறிவேப்பிலை குழம்பு - சமையல் குறிப்புகள் !

கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்
பொடியாக அரிந்த வெங்காயம்-1
பொடியாக அரிந்த தக்காளி- 1
வடகம்- 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்னெய்- 3 மேசைக்கரண்டி
1 மேசைக்கரண்டி எண்னெயில் வதக்க அரைக்க வேண்டியவை:
6 சின்ன வெங்காயங்கள், 4 சிறிய பூண்டிதழ்கள், அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன்மிலகு, அரை ஸ்பூன் இஞ்சி, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

செய்முறை
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
வடகம் போட்டு அவை பொரிந்ததும் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அவை குழைந்ததும் தூள்களைச் சேர்த்து சிறு தீயில் சிறிது வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து 1 கப் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner