Ads Header

Pages


15 March 2012

வாசகிகள் கைமணம்! இட்லி கட்லெட் / பேரீச்சம்பழ போண்டா / கொலுஷா


கொள்ளை ருசியில்
இட்லி கட்லெட்

தேவையானவை: இட்லி - 4, துருவிய சீஸ் - அரை கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 4, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பிரெட்தூள் - கால் கப், மைதா - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை: மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் துருவிய சீஸ் சேர்த்து, அடுப்பை அணைக்கவும். இதனுடன் கொத்தமல்லி, உதிர்த்த இட்லி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து உருட்டி, கட்லெட் போல் செய்து கொள்ளவும். இதை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட்தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
--------------------------------------------------------------------------------

பேரீச்சம்பழ போண்டா


தேவையானவை: பேரீச்சம்பழம், முந்திரிப்பருப்பு, அரிசி - தலா 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சம்பழத்தில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு, உள்ளே ஒரு முந்திரிப்பருப்பை வைத்து மூடவும். இதேபோல் எல்லா பேரீச்சம்பழம்-முந்திரியை செய்து கொள்ளவும். அரிசியுடன் உளுந்தை சேர்த்து சுகியத்துக்கு அரைப்பது போல அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் பேரீச்சம்பழத்தை தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால், அரிசியை அரைக்கும்போதே மிளகாய்த்தூள் அல்லது பச்சைமிளகாய் சேர்த்து அரைத்தும் செய்யலாம். உப்பு, காரம், இனிப்பு சுவையில் இருக்கும்.
--------------------------------------------------------------------------------

கொலுஷா

தேவையானவை: மைதா, சர்க்கரை - தலா 2 கப், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மைதா, உப்பு, நெய், தயிருடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவில் சிறிது எடுத்து சிறிய பூரிகளாக செய்து இரண்டு பூரிகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து, ஓரங்களை அழுத்தி விட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரட்டைக் கம்பி பாகு பதத்தில் வந்ததும் இறக்கவும். இதில் பொரித்த பூரிகளைப் போட்டு, சிறிது ஊறியதும் தனியே எடுத்து வைத்துப் பரிமாறவும்.

இட்லி கட்லெட்: சீஸுக்கு பதிலாக துருவிய சோயா பனீர் சேர்க்கலாம். ஆரோக்கியத்துக்கு நல்லது.

கொலுஷா: இரண்டு பூரியின் நடுவில் சிறிது கோவாவை வைத்து ஒட்டி பொரிக்கலாம். டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.

பேரீச்சம்பழ போண்டா: உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து செய்தால், நல்ல வாசனையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.
------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner