Ads Header

Pages


24 March 2012

நெல்​லிக்​கனி ரக​சி​யம்! மருத்துவப் பயன்கள்!

நெல்​லிக்​கனி ரக​சி​யம்!

மூத் ​தோர் சொல்​லும் நெல்​லிச்​சு​வை​யும் முன்​னர் கசக்​கும் பின்​னர் இனிக்​கும் என்ற முது​மொ​ழிக்கு ஏற்ப நெல்​லிக் கனியை சுவைப்​ப​வர்​க​ளுக்கு அதன் லேசான கசப்பு மட்​டும்​தான் நினை​வில் வரும்.​ ஆனால் சாப்​பிட்ட பின் சிறிது தண்​ணீர் குடித்​தால் கிடைக்​கும் தித்​திப்பு அலா​தி​யா​னது.​ அதன் பலன் தெரிந்​தால்..​ அதனை யாரும் எளி​தில் விட​மாட்​டார்​கள் என்​பது நிஜம்.​


நெல் ​லிக்​க​னி​ யில் மனித உடம்​பிற்கு அத்​தி​யா​வ​சி​ய​மாக தேவைப்​ப​டு​கின்ற நீர் 81.2 சத​மும்,​​ புர​தம் 0.5 சத​மும்,​​ கொழுப்பு 0.1 சத​மும்,​​ நார்​பொ​ருள் 3.4 சத​மும்,​​ மாவுப்​பொ​ருள் 14.1 சத​மும்,​​ உலோக உப்​புக்​கள் 0.7 சத​மும்,​​ கால்​சி​யம் 0.05 சத​மும்,​​ பாஸ்​ப​ரஸ் 0.03 சத​மும் உள்​ளன.​ 100 கிராம் எடை​யுள்ள நெல்​லிக்​க​னி​யில் இரும்பு 1.2 மி.கிரா​மும்,​​ ​ நிகோ​டி​னிக் அமி​லம் 0.2 மி.கிரா​மும்,​​ வைட்​ட​மின் சி 600 மி.கிரா​மும் உள்​ளது.​ ​ நாம் இரண்டு பெரிய ஆரஞ்சு பழத்தைச் சாப்​பி​டு​வ​தால் கிடைக்​கும் சி விட்​ட​மின் சக்​தியை ஒரு சிறிய நெல்​லிக்​கனி நமக்கு கொடுக்​கும் என்​பது வியப்​பான செய்தி.​


​ குறைந்த விலை​யில் கிடைக்​கும் நெல்​லிக் கனியை தொடர்ந்து உட்​கொண்​டால் ரத்​தத்​தில் கொலஸ்ட்​ரா​லின் அளவு கட்​டுப்​ப​டுத்​தப்​ப​டும்.​ ​ ரத்​தத்தை சுத்​தி​க​ரிக்​கும் பணி​யை​யும் நெல்​லிக்​கனி செய்​கி​றது.​ முடி​ய​ழகை பேண வித​வி​த​மான கெமிக்​கல் நிறைந்த பொருட்​களை வாங்கி பயன்​ப​டுத்​து​வதை காட்​டி​லும் உலர வைத்த நெல்​லிப்​பொ​டியை முடி​யில் தேய்த்து வந்​தாலே போதும்.​ முடி பட்டு போன்று பள​ப​ளக்​கும்.​ ​ பாக்​டீ​ரி​யாக்​களி​லி​ருந்து தோலினை பாது​காக்​கும் நாசி​னி​யா​க​வும் நெல்​லிக்​கனி பயன்​ப​டு​கி​றது'' என்​றார் அழ​கி​ரி​சாமி.​

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner